நீச்சல் தடாகத்தில் சடலமாக மிதந்த கொரியப் பிரஜை

Prathees
2 years ago
நீச்சல் தடாகத்தில்  சடலமாக மிதந்த கொரியப் பிரஜை

சுற்லாப்பயணியாக நாட்டிற்கு  விஜயம் செய்ய வந்த வெளிநாட்டவர் ஒருவர் நேற்று (18ஆம் திகதி) வாத்துவவிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சுற்றுலா பயணி நேற்று முன் தினம் ஹோட்டலுக்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் 43 வயதான கிம் யங்ஸ்ம் என்ற தென் கொரியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை நீச்சல் குளத்தில் கொரியர் சடலமாக மிதப்பதை கண்டு விடுதியின் மின் ஊழியர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது.

கொரிய பிரஜை ஒருவர் கடற்கரையில் இருந்து நீச்சல் குளத்தில் குதிப்பது நீச்சல் குள சுவரில் இருந்த கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன்இ நீதவான் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!