அரிசி தொடர்பில் நாட்டில் மாஃபியா ஒன்று செயற்பட்டு வருகிறது - சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர் சங்கம்
Kanimoli
2 years ago
அரிசி தொடர்பில் நாட்டில் மாஃபியா ஒன்று செயற்பட்டு வருவதாக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதாவது உள்நாட்டு அரிசியுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரசி கலந்து சந்தைக்கு விநியோகித்து வருவதாக அச் சங்கம் கூறுகின்றது.
அச் சங்கத்தின் தலைவர் யூ.கே. சேமசிங்க என்பவர் நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு நெல்லின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் அரிசி 200 ரூபா முதல் 210 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், சில நெல் ஆலை உரிமையாளர் உள்நாட்டு அரிசியுடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கலந்து 160 ரூபா முதல் 170 விற்பனை செய்வதாக குறிப்பிடப்படுகின்றது.