உந்துருளி திருட்டு சம்பவம் தொடர்பாக 13 வயது சிறுமி கைது
Kanimoli
2 years ago
உந்துருளி திருட்டு சம்பவம் தொடர்பாக 13 வயது சிறுமி கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அச் சிறுமியை காலி கிதுலாம்பிட்டிய சிறுவர் தடுப்பு நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு காலி நீதவான் லக்மினி விதானகமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி அடுத்த வருடம் முதலாம் திகதி வரை குறித்த சிறுமி அங்குத் தடுத்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி யக்கலமுல்ல பிரதேசத்தில் உந்துருளியை திருட சென்ற குற்றச்சாட்டில் குறித்த சிறுமியும் மற்றுமொரு இளைஞனும் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் தப்பியோடியுள்ளார்.
பிரதான சந்தேகநபர் சிறுமியின் தாயுடன் தொடர்பில் இருந்தமை பின்னர் தெரியவந்துள்ளது. பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை யக்கலமுல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.