வவுனியா நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதி பலியான சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது
வவுனியா நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதி பலியான சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சிவா நகர் பகுதியில் வசிக்கும் துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டிற்கு வெளியில் வரும்போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே சந்தேகத்தின் பேரில் ஒருவர் நெடுங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.