நாடாளுமன்றத்திற்கு நிகரான மக்கள் சபையொன்றை அமைக்க நடவடிக்கை? – சுசில் விளக்கம்
Mayoorikka
2 years ago
நாடாளுமன்றத்திற்கு நிகரான மக்கள் சபையொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எனினும் அது அரசியலமைப்புக்கு முரணானது என அவர் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்துக்கு சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது என்றும் எனினும் அதை வேறு எந்த அமைப்பிற்கும் மாற்ற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் சிறப்புரிமைகள் குழுவுக்கு அனுப்பப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்