பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளை ஆராய நடவடிக்கை

Mayoorikka
2 years ago
பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளை ஆராய நடவடிக்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் அளவு  மற்றும் தரம் குறித்து ஆராய்வதற்கு  வேலைத்திட்டமொன்‍றை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நுகர்வோர் மற்றும் சேவை அதிகார சபையுடன் இணைந்து எடை அளவீடு திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், அமைச்சரவையின் அங்கீகாரத்தின் அனுமதியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

நுகர்வோருக்கு வழங்கப்படும் எரிபொருளில் சரியான அளவு உள்ளதா என்றும், அந்த எண்ணெயில் வேறு ஏதாவது கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என ஆராயப்படும் எனவும் குறிப்பிட்டார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!