6 அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று முதல் குறைப்பு

Mayoorikka
3 years ago
6 அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று முதல் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ பூண்டு 60 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பூண்டின் புதிய விலை 490 ரூபாய் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு கிலோ ரொட்டி மாவு 55 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 375 ரூபாயாக இருந்த ஒரு கிலோ மாவின் புதிய விலை 320 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 30 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 285 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 260 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 169 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு கிலோ பாண் தூளின் விலை 55 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 320 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4