போராட்டத்தில் சிறுவன் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டமை குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணை!

Mayoorikka
2 years ago
போராட்டத்தில் சிறுவன் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டமை குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணை!

காலி முகத்திடலில்  இடம்பெற்ற போராட்டத்தின்போது சிறுவனை பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸார் மற்றும் குழந்தையின் பெற்றோருக்கு எதிராக பல தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த சபையின் தலைவர் உதய குமார அமரசேன குறிப்பிட்டார்.

இதன்படி, பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது அங்கிருந்த உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கோட்டை பொலிஸாரிடம் மேலதிக விளக்கத்தை கோரியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!