யக்கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் மரணம்
Prathees
2 years ago
காலி யக்கலமுல்ல, கருவலகல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.