பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு 10 வருட கடூழிய சிறை
Prathees
2 years ago
பெண் ஒருவரை அநியாயமாக தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே தீர்ப்பளித்தார்.
அத்துடன், பிரதிவாதிகளுக்கு தலா 15,000 ரூபா தண்டம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
2015 ஆம் ஆண்டில், புறக்கோட் காவல் நிலையத்தில் இணைக்கப்பட்ட குறித்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் ஒரு பெண்ணை தவறாக சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.