உள்நாட்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை அமைப்பதற்கு பலதரப்பு முயற்சிகள் தேவை -அலி சப்ரி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் மூலம் முன்மொழியப்பட்ட வெளிப்புறப் பொறிமுறையைத் தடுக்கும் வகையில் உள்நாட்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை அமைப்பதற்கு பலதரப்பு முயற்சிகள் தேவை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிப்புற பொறிமுறையைத் தடுக்கும் உண்மையைத் தேடும் பொறிமுறையை அமைக்க பல தரப்பு முயற்சிக்கு தாம் அழைப்பு விடுப்பதாக அவர் இன்று இலங்கையின் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நியாயமற்ற முறையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும பாதிக்கப்பட்டவர்கள், உள்நாட்டு பொறிமுறையின் கீழ் முன் வந்து தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கவேண்டும்.
இதனை செய்யாவிட்டால், பொறிமுறையானது நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்று அமைச்சர் கூறினார்.
வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் ஒட்டுமொத்த தீர்மானத்தையும் இலங்கை அரசாங்கம் எதிர்க்;கிறது.
இது இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது.
எனவே எந்தவொரு வெளிப்புறப் பொறிமுறைக்கும் இணங்கப் போவதில்லை என்று இலங்கை தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.