புளோரிடாவில் இருந்த நியூஜெர்சிக்கு சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் புகுந்த பாம்பு
Prasu
2 years ago
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்த நியூஜெர்சிக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது.
அப்போது விமானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்து இருப்பது தெரிய வந்தது. பாம்பை கண்ட பயணிகள் அலறினார்கள்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் நியூஜெர்சியில் தரையிறங்கியதும், வன அதிகாரிகள் குழு விமானத்துக்குள் சென்று பாம்பை பிடித்தனர்.
அந்த பாம்பு விஷ தன்மையற்றது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்துக்குள் பாம்பு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.