இந்தியாவில் 41½ கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டனர்: ஐ.நா. அறிக்கை

Prasu
3 years ago
இந்தியாவில் 41½ கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டனர்: ஐ.நா. அறிக்கை

ஐ.நா. மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டமும் இணைந்து புதிய வறுமை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டன. 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலகத்தில் 111 நாடுகளில் 120 கோடிபேர், அதாவது 19.1 சதவீத மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். 

அவர்களில் பாதிப்பேர், அதாவது 59 கோடியே 30 லட்சம்பேர், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்தியாவை பொறுத்தவரை, 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 41 கோடியே 50 லட்சம்பேர், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். 

குறிப்பாக, 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2015-2016 நிதிஆண்டுக்குள் 27 கோடியே 50 லட்சம் பேரும், 2015-2016 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 14 கோடி பேரும் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டார்கள். 

இது ஒரு வரலாற்றுசிறப்புமிக்க மாற்றம். 2030-ம் ஆண்டுக்குள், வறுமையில் வாழும் ஆண், பெண், குழந்தைகள் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 

இதே ரீதியில் சென்றால், அந்த இலக்கை எட்டுவது சாத்தியமானதுதான். இந்த முன்னேற்றத்தையும் மீறி, 2020-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி, உலகிலேயே அதிகமான ஏழைகள் இருப்பது இந்தியாவில்தான். அங்கு 22 கோடியே 89 லட்சம் ஏழைகள் இருக்கிறார்கள். 

அதற்கு அடுத்த இடத்தில்தான் நைஜீரியா (9 கோடியே 67 லட்சம்) உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4