திலினியுடன் எந்த சம்பந்தமும் இல்லை – நாமல்
Mayoorikka
2 years ago
திலினி பிரியமாலியின் பணப் பரிவர்த்தனைகளுடன் தமக்கோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள எவருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தேக நபரையும் மற்றுமொரு நபரையும் விடுவிக்குமாறு தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளை மறுப்பதாக கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் தமக்கு தொடர்பில்லாததால் பொலிஸாரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தொழில்களில் முதலீடு செய்ய அரசியல்வாதிகளுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.