வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது

Kanimoli
3 years ago
 வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது

கோதுமை மாவின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில்  வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  

இதன்படி, கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

கோதுமைமாவின் விலை 270 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதே பாணின் விலையை நாங்கள் அதிகரித்தோம். கோதுமைமாவின் விலை 400 ரூபாவாக உயர்த்தப்பட்ட போதிலும் பாண் இறாத்தல் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவில்லை.

400 ரூபா என்ற ஒரு கிலோ கிராம் கோதுமைமாவின் விலையை 100 ரூபாவால் குறைப்பதால் பாணின் விலையை குறைக்க முடியாது.

பாண் மற்றும் பணிஸ் ஆகியவற்றின் விலைகளை குறைக்க வேண்டுமாயின் கோதுமை மாவை விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்கள் கோதுமையின் விலையை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4