அமெரிக்காவில் கார் விற்பனை மையத்தில் திடீர் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு

#America #Accident #Death
Prasu
2 years ago
அமெரிக்காவில் கார் விற்பனை மையத்தில் திடீர் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மரியெட்டா நகரில் கார் விற்பனை மையத்தில் நேற்று முன்தினம் மாலை மேலே பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கார் நிறுத்தும் இடத்தில் விழுந்துள்ளது. 

இதனை அடுத்து கார்கள் மீது மோதிய வேகத்தில் விமானத்தில் தீ பற்றி உள்ளது அதை தொடர்ந்து அடுத்தடுத்த கார்களிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. 

இந்த தீ விபத்தில் பயணித்த விமானி உட்பட இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்தில் கார் விற்பனை மையத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கிறது. 

இருப்பினும் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான கார்கள் தீக்கீரையாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!