சூடானில் இரு பிரிவினருக்கு இடையே முற்றிய மோதல் - மொத்தமாக 150 பேர் உயிரிழப்பு
சூடான் நாட்டில் ப்ளூ நைல் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில் ஹவுஸ் ஆப் பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த வாக்குவாதத்தினால் ஒருவரை ஒருவர் அடிக்கடி தாக்கிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இரண்டு நாட்களாக இரு பிரிவுகளுக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் ஏற்பட்ட மோதலால் 150 க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 86 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவர்கள் அல்மஹி பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அல்மஹி பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் நேற்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியும் குடியிருக்கும் வீடுகளை தீ வைத்து எரித்தும் வன்முறையில் ஈடு பட்டுள்ளனர்.
இந்த தகவலை மருத்துவமனையின் தலைவரான அப்பாஸ் மவுசா தெரிவித்துள்ளார்.