உள்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் - அமெரிக்க ஜனாதிபதி பைடன் வலியுறுத்தல்
கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் உள்ள நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை ஒரு நாளுக்கு இரண்டு மில்லியன் பீப்பாய்கள் அளவு குறைக்க போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும் இது பற்றி அமெரிக்கா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எரிசக்தி துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.
அதாவது அடுத்த மாதம் முதல் நாட்டில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் இருந்து பத்து மில்லியன் பீபாய்கள் எண்ணெய் கூடுதலாக வெளியேற்றும் படி அறிவுறுத்திருந்த நிலையில் தற்போது 15 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் கூடுதலாக வெளியேற்றும் படி அறிவுறுத்தி இருக்கின்றார்.
இதன் மூலமாக எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் எனக் கூறியுள்ளார். மேலும் டிசம்பர் மாதம் முதல் இந்த எரிபொருள் பயன்பாட்டிற்கு வரும் அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.
வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற தேர்தலை கருத்தில் கொண்டு அரசு எரிபொருள் விலையை கட்டுக்குள் வைக்க இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற கருத்தை அவர் நிராகரித்துள்ளார்.