ரஷ்யாவிற்கு பயிற்சி வழங்க களமிறங்கிய ஈரான் வல்லுனர்கள் குழு
Prasu
2 years ago
ஈரான் இராணுவத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ரஷ்யாவிற்கு ஆளில்லா விமான பயிற்சி அளிக்க சென்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அனைத்து தகவல்களும் தற்போது கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஈரான் தயாரித்த ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி, ஈரான் தனது பயிற்சிக்காக இந்த தொழில்நுட்பக் குழுவை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது.
எனினும், இந்தச் சூழ்நிலையின் அடிப்படையில், ஈரானின் ஆளில்லா விமானம் தயாரிக்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய முடியாத வகையில் இங்கிலாந்தும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.