ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் - அழிக்கப்படும் கோழிகள்
Prasu
2 years ago
நெதர்லந்தில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவுவதால் நாட்டின் தென்பகுதியில் உள்ள பண்ணைகள் மூடப்பட்டு வருகின்றது.
இதனால் 300,000 கோழிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நெதர்லந்தில் செப்டம்பரிலிருந்து சுமார் 30 பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாயின. அந்தவகைப் பறவைக் காய்ச்சல் மரணத்தை விளைவிக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.
பறவைக் காய்ச்சலால் நெதர்லந்தில் இதுவரை 6 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டன.
சென்ற ஆண்டு அக்டோபர் இறுதியில் அந்த வகைப் பறவைக்காய்ச்சல் நெதர்லந்தில் பரவத் தொடங்கியதாக டச்சு உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.
பிரான்ஸிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.