அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 23.10.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 23.10.2022

மேஷம்
அசுவினி: சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பகைவர் விலகிச் செல்வர்.
பரணி: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தினர் ஆதரவுடன் வெற்றி காண்பீர்கள்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வரவு அதிகரிக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: குடும்பநலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டு.
ரோகிணி: மூத்தோர்கள் வழியே நல்ல செய்தி வரும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும்.
மிருகசீரிடம் 1, 2: கடனாக கேட்ட தொகை வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை: பிரபலங்களின் ஆதரவுடன் செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: பழைய பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். விருப்பம் நிறைவேறும்.

கடகம்
புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். உற்சாகமான நாள்.
பூசம்: வியாபாரம் செய்யும் இடத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: லாப சிந்தனை மேலோங்கும். அதற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்
மகம்: மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
பூரம்: நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். எதிர்பாராத வருமானம் உண்டு.
உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் காண்பீ்ர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: வீண்குழப்பம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
அஸ்தம்: மனம் மகிழும்படியான சம்பவம் நடைபெறும். கோயில் தரிசனம் மகிழ்ச்சி தரும்.
சித்திரை 1, 2: பணிபுரியும் இடத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். நிதிநிலை உயரும்.

துலாம்
சித்திரை 3, 4: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் கூடும்.
சுவாதி: தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னை ஒன்று தீரும்.
விசாகம் 1, 2, 3: வாக்கை நிறைவேற்ற செலவுகள் செய்வீர்கள். மனதில் நிம்மதி ஏற்படும்.

விருச்சிகம்
விசாகம் 4: வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். நிதிநிலை உயரும்.
அனுஷம்: குடும்பத்திற்காக சில முயற்சியில் ஈடுபடுவீர்கள். நிலுவை பணம் வந்து சேரும்.
கேட்டை: பகைவரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நண்பர்களால் விருப்பம் நிறைவேறும்.

தனுசு
மூலம்: பக்தியில் மனம் ஈடுபடும். வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வீர்கள்.
பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்ய முதலீடு செய்வீர்கள். எண்ணம் நிறைவேறும்.
உத்திராடம் 1: பெரியோர் ஆசியுடன் புதிய முயற்சியில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: இரண்டு நாளாக இருந்த சங்கடம் விலகும். பணவரவு மகிழ்ச்சி தரும்.
திருவோணம்: இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.
அவிட்டம் 1, 2: எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். போட்டியாளர் விலகிச் செல்வார்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: சந்திராஷ்டமம் என்பதால் சிந்தித்து செயலாற்றுங்கள். எதிரி தொல்லை ஏற்படலாம்.
சதயம்: அமைதி காக்க வேண்டிய நாள். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.
பூரட்டாதி 1, 2, 3: முயற்சி இழுபறியாகும். அலைச்சல் கூடும். மனம் குழப்பமடையும்.

மீனம்
பூரட்டாதி 4: நண்பர் துணையுடன் வேலையை செய்து முடிப்பீர்கள். எண்ணம் நிறைவேறும்.
உத்திரட்டாதி: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. செலவு செய்து மகிழ்வீர்கள்.
ரேவதி: எண்ணம் ஒன்று பூர்த்தியாகும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட சங்கடம் விலகும்.