சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபர் கைது

Kanimoli
3 years ago
 சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபர் கைது

வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக இரகசிய தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் திங்கட்கிழமை(24) தீபாவளி தினத்தன்று சவளக்கடை காவல்துறையினர் தேடுதல் மேற்கொண்டு சந்தெக நபரை கைது செய்தனர்.

இவ்வாறு கைதானவர் அன்னமலை பகுதியை சேர்ந்த 58 வயதான சந்தேக நபர் என்பதுடன் வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன் இணைத்து குறித்த 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சான்று பொருட்கள் யாவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4