இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி செயலிழந்துள்ளது

Kanimoli
2 years ago
இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி செயலிழந்துள்ளது

 இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனை சீர்செய்யும் நடவடிக்கை விரைவாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வட்ஸ்அப் செயலிழந்தமையினால் கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலக முழுவதும் வட்ஸ்அப் செயலிழந்துள்ளதாகவும் பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நண்பர்களுக்கு செய்திகளை டைப் செய்ய அனுமதிக்கும் போதிலும் அதனை உரியவருக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும், வாட்ஸ்அப் இணையம் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலிகளும் செயலிழந்துள்ளன.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!