18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயது காதலன் கைது
18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயது காதலனை கைது செய்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் மன உளைச்சளுக்கு ஆளானதாகவும் மனநல பிரிவு விடுதியில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜூன் மாதம், சந்தேகநபருடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தாகவும், ஒரு மாதத்தின் பின் சந்தேகநபர் குறித்த யுவதியை பாணந்துறையில் உள்ள நண்பனின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஒரு கிண்ணத்தில் எதையோ கலந்து யுவதிக்கு குடிக்க கொடுத்ததாகவும், அப்போது யுவதி பாதி மயக்கமடைந்ததாகவும், பின்னர் காதலன் யுவதியுடன் தகாத உறவில் ஈடுப்பட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம், சந்தேகநபரான காதலன், யுவதியின் தனிப்பட்ட காணொளிகளை காண்பித்து, அவற்றை பகிரங்கப்படுத்துவதாக கூறி, பலமுறை யுவதியை மிரட்டி, பாலியல் தொல்லைக்கு சம்மதிக்க கோரியுள்ளார்.
சில மாதங்களில் பின் சந்தேகநபர் யுவதியுடன் தொடர்பை முறித்துக்கொண்டாதால் யுவதி வீட்டை விட்டு வெளியேறி நெருங்கிய உறவினர் வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.
யுவதி வழங்கிய வாக்குமூலத்தையடுத்து சந்தேகநபரை பாணந்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.