உகாண்டாவில் வேகம் எடுக்கும் எபோலோ வைரஸ் பரவல்-9 பேர் பாதிப்பு

Prasu
3 years ago
உகாண்டாவில் வேகம் எடுக்கும் எபோலோ வைரஸ் பரவல்-9 பேர் பாதிப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் எபோலோ வைரஸ் பரவத் தொடங்கியதை தொடர்ந்து அரசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் உகாண்டாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் உகாண்டாவில் எபோலோ நோய் தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு 2 முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகளையும் காங்கோ அரசு செலுத்தி வருகிறது.

இந்த சூழலில் உகாண்டா தலைநகர் கம்பாலா நகரில் மேலும் 9 பேருக்கு எபோலோ வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜேன்ரூத் அசெங் கூறியுள்ளார். 

இதுவரை 75 பேருக்கு எபோலோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

மேலும் இதுவரை  எபோலோ நோய் தொற்று காரணமாக 28 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

அதேசமயம் மற்றொரு அண்டை நாடான காங்கோவிலும் எபோலோ பரவலுக்கான அறிகுறிகள் பதிவாகி இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4