அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 27.10.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 27.10.2022

மேஷம்
அசுவினி: முயற்சிகளில் தடங்கல் ஏற்படும். எதிலும் கவனமாக செயல்படுங்கள்.
பரணி: பணியில் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் சங்கடம் உண்டாகும்.
கார்த்திகை 1: புதிய முயற்சி இழுபறியாகும். எதிர்பார்த்த நன்மை தள்ளிப் போகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத் தேவை நிறைவேறும்.
ரோகிணி: பொன் பொருள் சேரும். நண்பர் ஆதரவால் உங்கள் முயற்சிகள் நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2: தொழிலில் மந்த நிலை நீங்கும். லாபம் அதிகரிக்கும். நன்மையான நாள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: புதிய உற்சாகம் தோன்றும். சொத்து விவகாரம் பற்றி ஆலோசிப்பீர்கள்.
திருவாதிரை: குடும்பத்தில் பிரச்னைகளை சரிசெய்வீர்கள். பெரியோரின் ஆதரவுண்டு.
புனர்பூசம் 1, 2, 3: அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நிதிநிலை உயரும்.

கடகம்
புனர்பூசம் 4: எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும்.
பூசம்: எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
ஆயில்யம் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உங்களை விட்டு விலகியவர்கள் திரும்ப வருவர்.

சிம்மம்
மகம்: வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.
பூரம்: தொழிலில் இருந்த சிக்கல்களை சரிசெய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்
உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: முயற்சி எளிதாக நிறைவேறும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும்.
அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றி தரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் கூடும்.
சித்திரை 1, 2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். ஆதாயம் அதிகரிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4: மனநிம்மதி உண்டாகும். தம்பதியர் ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு செயல்படுவர்.
சுவாதி: புதிய வேலைக்கான முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3: உறவினரின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். சுயமுயற்சியில் நினைத்ததை சாதிப்பீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
அனுஷம்: குடும்பத்தில் செலவுகள் கூடும். புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.
கேட்டை: வழக்கமான செயல்களில் ஈடுபடுவீர்கள். சிலர் வெளியூர் பயணம்மேற்கொள்வர்.

தனுசு
மூலம்: எதிர்பார்த்த வருவாய் உங்களைத் தேடி வரும். ஆதாயமான நாள்.
பூராடம்: பேச்சில் விவேகம் வெளிப்படும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள்.
உத்திராடம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: புதிய நட்பின் வழியே எதிர்பார்ப்புகள் நிறைவேறி மகிழ்ச்சி காண்பீர்கள்.
திருவோணம்: எதிர்பாராத வருமானம் கிடைக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தொழிலில் ஆதாயம் உண்டு.
சதயம்: பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு உண்டாகும். விருப்பம் நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றி பெறும்.

மீனம்
பூரட்டாதி 4: பழைய பிரச்னை முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
உத்திரட்டாதி: பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். புதிய நட்பால் நன்மை ஏற்படும்.
ரேவதி: புதிய முயற்சி வெற்றி பெறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.