யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் உணவு தயாரித்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு தூங்கிய திருடர்கள்

Prasu
3 years ago
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் உணவு தயாரித்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு தூங்கிய திருடர்கள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோடை மாவுல்லையில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் இல்லாத வேளையில் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்த திருடர்கள் இருவர், கொள்ளையில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அறுசுவை உணவைத் தயாரித்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே அயர்ந்து தூங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலை வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர், தனது படுக்கையில் இரண்டு அந்நியர்கள் தூங்குவதைக் கண்டு, 119 க்கு அழைப்பை மேற்கொண்டார்.

எனினும் காவல்துறை குழு வந்தபோது திருட வந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றபோது, மற்றவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற திருடனை கைது செய்வதற்கான தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4