திலினி பிரியமாலி, தமிழ் அரசியல்வாதிகள் எவருடனும் தொடர்பில் இருந்தார் எனத் தகவல் எதுவும் வெளியாகவில்லை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Kanimoli
3 years ago
திலினி பிரியமாலி, தமிழ் அரசியல்வாதிகள் எவருடனும் தொடர்பில் இருந்தார் எனத் தகவல் எதுவும் வெளியாகவில்லை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இலங்கையில் பாரியளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி, தமிழ் அரசியல்வாதிகள் எவருடனும் தொடர்பில் இருந்தார் எனத் தகவல் எதுவும் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எனினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருடன் அவர் தொடர்பில் இருந்தார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் , இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

128 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி இதேவேளை, திலினி பிரியமாலி தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, அவர் 128 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது என்றும் நிஹால் தல்துவ கூறினார்.

திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை மொத்தமாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும், அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் திலினியின் வலையில் சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகள், கலைஞர்கள், வியாபாரிகள் எனப் பலரும் சிக்கி பல கோடிகளை இழந்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4