பிரபல இசையமைப்பாளரின் கத்திக்குத்துக்கு இலக்காகி 10 வயது சிறுவன் மரணம்

Prathees
3 years ago
பிரபல இசையமைப்பாளரின் கத்திக்குத்துக்கு இலக்காகி 10 வயது சிறுவன் மரணம்

கொஸ்மோதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரெல்ல இலுக்கேட்டிய பிரதேசத்தில் நேற்று (27) இரவு கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரபல இசைக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பின்னர், அது வாக்குவாதமாக மாறி, வீட்டுக்குச் செல்லும் வழியில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு இசையமைப்பாளர் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.

எனினும், பெண்ணின் பத்து வயது மகன் தலையில் குத்தப்பட்டான்.

தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான குழந்தை பின்னர் மொரவக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

எனினும் துரதிஷ்டவசமாக குழந்தை இன்று (28) காலை உயிரிழந்துள்ளது.

மொரவக, வெலிவயில் உள்ள பௌத்த கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு கல்வி கற்கும் சதேவ் மெட்சர என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் பிரபல இசைக்குழு ஒன்றின் வழக்கமான பாடகரும் வாத்தியக் கலைஞருமான இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவக்க பொலிஸார் இன்று காலை அவரை கைது செய்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4