அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 29.10.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 29.10.2022

மேஷம்
அசுவினி: மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.
பரணி: குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி இருக்கும்.
கார்த்திகை 1: புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். பிறரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: விரும்பியதை அடைவீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.
ரோகிணி: சவாலான வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நன்மை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: முக்கிய பிரமுகரின் ஆதரவால் நன்மை காண்பீர்கள். யோகமான நாள்

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும். எதிரிகள் சரணடைவார்கள்.
திருவாதிரை: எதிரி தொல்லை நீங்கி நன்மை காண்பீர்கள். உங்கள் திறமை வெளிப்படும்.
புனர்பூசம் 1, 2, 3: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.

கடகம்
புனர்பூசம் 4: பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். நிதிநிலை சாதகமாக இருக்கும்.
பூசம்: தொழிலில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். இன்று யோகமான நாள்.
ஆயில்யம் திட்டமிட்ட பணிகள் அந்நியர்களின் உதவியுடன் இன்று நிறைவேறும்.

சிம்மம்
மகம்: திடீர் பயணம் உண்டாகும். அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பூரம்: பெரிய மனிதர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நண்பரிடம் ஏற்பட்ட பிரச்னை தீரும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் சங்கடம் விலகும். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: எதிர்கால வாழ்வை நினைத்து தைரியமான ஒரு முடிவை எடுப்பீர்கள்.
அஸ்தம்: அரசு வழியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும்.
சித்திரை 1, 2: சுற்றி இருப்பவர்களில் நல்லவர், கெட்டவர் யார் என்பது தெரிய வரும்.

துலாம்
சித்திரை 3, 4: இழுபறியாக இருந்த பணி முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும்.
சுவாதி: தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். உறவினரால் ஆதாயம் அடைவீர்கள்.
விசாகம் 1, 2, 3: பணியில் அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். பேச்சால் பிறரைக் கவர்வீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: எளிதாக முடிய வேண்டிய வேலைகளை போராடி முடிக்க நேரிடும்.
அனுஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வழக்கமான போக்கு இல்லாமல் போகும். மனம் குழப்பமடையும்.
கேட்டை: எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

தனுசு
மூலம்: அலைச்சல் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் முரண்பாடு வரலாம். நிதானம் தேவை.
பூராடம்: மறைமுக பிரச்னையால் தொல்லை ஏற்படும். முயற்சியில் தடை உண்டாகும்.
உத்திராடம் 1: விவாதத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். யோகமான நாள்.
திருவோணம்: பழைய கடனை அடைப்பீர்கள். உங்கள் செயல்கள் வெற்றி பெறும்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர்கள். முயற்சி வெற்றி பெறும்.
சதயம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.
உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தேக்கம் மறையும். குழப்பங்கள் மறையும்.
ரேவதி: நடக்காது என நினைத்த செயல் நடந்தேறும். மனக்கவலை நீங்கும்