பேருந்துகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்ல முடியும் என்ற சட்டத்தை நீக்க முடிவு

Kanimoli
3 years ago
 பேருந்துகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்ல முடியும் என்ற சட்டத்தை நீக்க முடிவு

இலங்கையில் நடைமுறையிலுள்ள பேருந்துகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்ல முடியும் என்ற சட்டத்தை நீக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்ட இந்த சட்டத்தை நீக்குவதன் மூலம், பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு, போக்குவரத்து அமைச்சு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் 12 வீதத்தால், பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைவான தீர்மானத்தை விரைவாக எடுப்பதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்தை நீக்குவதன் மூலம் 34 ரூபாவாகவுள்ள குறைந்தபட்ச கட்டணத்தை 29 ரூபாவாக குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4