முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

Kanimoli
3 years ago
முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

சட்டரீதியற்ற முறையில் படையிலிருந்து விலகிச்சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியாக சேவையிலிருந்து விலகிக்கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய 2022.11.15 ஆம் திகதி முதல் 2022.12. 31ஆம் திகதி வரையான காலம் பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2022.10.25 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் சேவையிலிருந்து சட்டரீதியாக விலகாமல் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சேவையிலிருந்து உத்தியோகப்பூர்வமாக விலகிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் உள்ளவர்கள் மாத்திரம் வெளியேறுவதற்கு முன்னர் அவற்றினை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4