அமெரிக்காவில் வேண்டா வெறுப்பாக வாங்கிய டிக்கெட்டுக்கு 1 லட்சம் டொலர் பரிசுத்தொகை

Kanimoli
3 years ago
அமெரிக்காவில் வேண்டா வெறுப்பாக வாங்கிய டிக்கெட்டுக்கு 1 லட்சம் டொலர் பரிசுத்தொகை

அமெரிக்காவில் கரோலினா மாகாணத்தில் வேண்டா வெறுப்பாக வாங்கிய டிக்கெட்டுக்கு 1 லட்சம் டொலர் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த டனா ப்ரூயிட் என்ற 62 வயது பெண்ணுக்கே இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதன் இலங்கை பெறுமதி சுமார் 3.6 கோடியாகும்.

மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்த டானா பரயீட் இது குறித்து கூறியதாவது,

"கரோலினா மாகாணத்தில் உள்ள மவுண்ட் ஐரியில் உள்ள மேபெர்ரி மார்ட்டில் தான் வழக்கமாக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவேன். எப்போதும் வாங்கும் சுரண்டல் வகை டிக்கெட்டை கடைக்காரரிடம் கேட்டேன். ஆனால் அது விற்று தீர்ந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால், மிகுந்த ஏமாற்றம் அடைந்த நான். இவ்வளவு தூரம் வந்து விட்டோம். வந்ததற்கு இரண்டாவது விருப்பமாக இருந்த மற்றொரு டிக்கெட்டை வாங்கி விடுவோம் என்று வேறொரு நிறுவன லாட்டரி டிக்கெட்டை வாங்கி சுரண்டி பார்த்தேன்.

அப்போது எனக்கு 1 லட்சம் டாலர் பரிசு விழுந்தது. இதை பார்த்ததும் ஒரு நிமிடம் மாரடைப்பே வந்தது போல ஆகிவிட்டது. நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

இந்த தொகையை எனது ஓய்வு கால சேமிப்பாகவும் நியூ இங்கிலாந்திற்கு சுற்றுலா செல்வதற்காக பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளேன். இதுவரை எனக்கு கிடைத்த வெற்றிகளில் சிறந்த வெற்றி இதுதான்" என்றார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4