பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணையம் விசாரணை

Kanimoli
3 years ago
பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணையம் விசாரணை

 மாத்தறை – திஹகொட பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மாத்தறை மனித உரிமை ஆணைய அலுவலகத்தின் குழுவொன்று இன்று (29) குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் ​​அதனை நிறுத்தி சோதனையிட சென்ற போது, ​​திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாகி இயங்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனால் 15 வயதுடைய பாடசாலை மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவன் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.   

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4