வடகொரியா மீண்டும் நடத்திய ஏவுகணை சோதனை - அமெரிக்கா, ஜப்பான் கண்டனம்

Prasu
3 years ago
வடகொரியா மீண்டும் நடத்திய ஏவுகணை சோதனை - அமெரிக்கா, ஜப்பான் கண்டனம்

கொரிய எல்லையில் தென்கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 

வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் வரும் 31-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ம் தேதி வரை கொரிய எல்லையில் வான்வழி பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வடகொரியா நேற்று குறுகிய தூரம் செல்லக்கூடிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. 

வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள டோங்சோன் நகரில் இருந்து ஏவப்பட்ட 2 ஏவுகணைகளும் 24 கி.மீ உயரத்தில் 230 கி.மீ வரை பறந்து சென்று பின்னர் கடலில் விழுந்ததாக தென்கொரியா கூட்டுப்படைகளின் தலைவர் தெரிவித்தார். 

இந்நிலையில், வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4