நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் தளம்பல் நிலை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

Kanimoli
3 years ago
நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் தளம்பல் நிலை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் தளம்பல் நிலை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்நிலையில் இடியுடன் கூடிய பலத்த காற்று வீசும் போதும் மின்னல் தாக்கங்களின் போதும் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4