பாகிஸ்தானில் பிரமாண்ட பேரணி நடத்திய இம்ரான்கான் - மீண்டும் இந்தியாவை பாராட்டி பேச்சு

#Pakistan #ImranKhan
Prasu
3 years ago
பாகிஸ்தானில் பிரமாண்ட பேரணி நடத்திய இம்ரான்கான் - மீண்டும் இந்தியாவை பாராட்டி பேச்சு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கடசி தலைவருமான இம்ரான்கான் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு மிகப் பெரும் பேரணியை தொடங்கினர். 

இந்த பேரணிக்கு நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைதியை நிலைநாட்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது, 

அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை உருவாக்கும் எந்த முயற்சியும் இரும்புக்கரம் கொண்டு எதிர்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது. 

லிபர்ட்டி சவுக்கில் ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான்கான் தனது முதல் உரையில் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டி பேசினார். 

தொடர்ந்து இம்ரான்கான் பேசியதாவது: எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும், ஆனால் நான் என் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதால் அமைதியாக இருக்கிறேன். 

முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்கிறேன். இல்லையெனில் என்னால் நிறைய சொல்ல முடியும். சுதந்திரமான பாகிஸ்தானைப் பார்க்க விரும்புவதாகவும், அதற்கு சக்திவாய்ந்த ராணுவம் தேவை. நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களை விமர்சிக்கும்போது, அது ஆக்கப்பூர்வமாகவும் உங்கள் முன்னேற்றத்திற்காகவும் இருக்கிறது. 

நான் இதை மீண்டும் சொல்கிறேன், என்னால் நிறைய சொல்ல முடியும் மற்றும் உங்களுக்கு பதிலளிக்க முடியும். ஆனால் பாதுகாப்பு நிறுவனங்கள் பலவீனமடைவதை நான் விரும்பவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4