சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசை அறிவித்த cor.பவுண்டேஷன் அமைப்பு

Prasu
3 years ago
சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசை அறிவித்த cor.பவுண்டேஷன் அமைப்பு

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி சாத்தானின் கவிதைகள் எனும் நூலை எழுதியதற்காக அச்சுறுத்தலுக்கு இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மீது ஒருவர் கொலை வெறி தாக்குதலின் நடத்தியுள்ளார். 

அதில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்துள்ளார் அதன் பின் ஒரு கையின் செயல்பாட்டை இழந்துள்ளார். இதற்கிடையே சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசாக அளிக்கப்படும் இனம் ஈரான் நாட்டைச் சேர்ந்த cor.பவுண்டேஷன் என்ற அமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த அமைப்புக்கு அமெரிக்கா நேற்று பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் அமெரிக்க நீதி துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாடு பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. உலகளாவிய கருத்து சுதந்திரம், மத சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் போன்றவற்றிற்கு ஈரான் ஆட்சியாளர்களால் ஏற்படும் அச்சுறுத்தலை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4