அமெரிக்காவில் 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகளை பெற்ற பெண்

Prasu
3 years ago
அமெரிக்காவில் 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகளை பெற்ற பெண்

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணிற்கு 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பிறந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு வித்தியாசமான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

Tennessee-வை சேர்ந்தவர் Phi. இவருக்கு மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பது தான் விசித்திரம். இதையடுத்து பலரும் Phi-ஐ கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இது தொடர்பாக பதிலடி தரும் வகையில் வினோதமான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார். Phi கூறுகையில், 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் எனக்கு பிறந்ததற்காக நான் வெட்கப்படவில்லை, இது எனக்கு நன்மை தான்.

எப்படியென்று தானே கேட்கிறீர்கள்,அதாவது உங்களிடம் ஒன்று இருந்தால், அந்த ஒன்றையும் எடுத்துக் கொண்டால், உங்களிடம் பூஜ்ஜியம் மட்டுமே இருக்கும். ஆனால் உங்களிடம் எட்டு இருந்தால் மற்றும் அதிலிருந்து மூன்றை எடுத்தால், உங்களிடம் இன்னும் ஐந்து உள்ளது.

இன்னும் புரியவில்லையா? அதாவது என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் என்னை பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள்.ஆனால் இப்போது 8 பேரில் மூவர் இல்லையென்றாலும் ஐந்து பேர் இருப்பார்கள் என கூறியுள்ளார். அவரின் இந்த விளக்கத்தையும் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதனிடையில் மேலும் பல குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்பது Phi-ன் விருப்பமாம்..!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4