இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பை கடுமையாக சாடிய சனத் ஜெயசூர்யா .
நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பை இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூர்யா கடுமையாக சாடியுள்ளார்.
அணியின் மோசமான களத்தடுப்பை மன்னிக்க முடியாது என்று ட்வீட் செய்துள்ளார்.
ஏமாற்றம் தரும் நிகழ்வு. அத்துடன் மன்னிக்கவும் முடியாது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற ரசிகர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்! ஜெயசூர்யா ட்வீட் செய்துள்ளார்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற குழு 1 போட்டியில் நியூசிலாந்து அணி 65 ஓட்ட வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
டி20 போட்டிகளில் ஓட்ட அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
நேற்றைய வெற்றியின் மூலம் நியூசிலாந்து மூன்று ஆட்டங்களில் 5 புள்ளிகளுடன் குழு 1 பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அவர்கள் அரையிறுதியில் ஒரு இடத்தை அடைவதற்கு இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளனர்.
இதற்கிடையில் இலங்கை மூன்று போட்டிகளில் இரண்டு புள்ளிகளுடன் உள்ளது.