யாழ் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

Kanimoli
3 years ago
யாழ் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

யாழ் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது.

இதன்போது நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொண்ட நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஒஎம்பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாச ராஜபக்ச வெளியேறு என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த அமைச்சர் 9.30 மணிக்கு நடமாடும் சேவையை ஆரம்பித்துவிட்டு, மாவட்டச் செயலகத்திலிந்து தப்பி வெளியேறினார். இதனை அறிந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மாவட்டச் செயலக கேட்ப்போர் கூட்டத்துக்குள் நுழைந்து போராட்டம் மேற்கொண்டனர்.

அதனையடுத்து காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டு, கேட்போர் கூடத்தில் அமைச்சரின் பங்குபற்றுதலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் குறித்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4