விகாரை ஒன்றில் துறவரம் பூணுவதற்காக பௌத்த விகாரைக்கு சென்ற சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

Kanimoli
3 years ago
விகாரை ஒன்றில் துறவரம் பூணுவதற்காக பௌத்த விகாரைக்கு சென்ற சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

களுத்துறை மில்லனிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் துறவரம் பூணுவதற்காக பௌத்த விகாரைக்கு சென்ற சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் கடந்த 28 ஆம் திகதி நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம, வீதியாகொட பிரதேசத்தை சேர்ந்த யேசித் கிமிஹான வீரசிங்க என்ற 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது விருப்பத்திற்கு அமைய பெற்றோரின் அனுமதியுடன் 40 நாட்களுக்கு முன்னர் விகாரைக்கு சென்று ஆரம்ப சடங்குகளில் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விகாரையில் தங்கியிருந்த சிறுவனை நேற்று முன்தினம் விகாரையில் இருக்கவில்லை என்பதால், சிறுவனை தேடியுள்ளனர்.

அப்போது சிறுவன் களஞ்சிய அறையில் காவி துணியின் உதவியுடன் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமந்த தேவகேவின் ஆலோசனைக்கு அமைய மில்லனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4