இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்! வெளியாகவுள்ள அறிக்கை!

Mayoorikka
3 years ago
இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்! வெளியாகவுள்ள அறிக்கை!

இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காணும் விடயத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனது விசாரணைகளை இறுதி செய்யவுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து திணைக்களம் கடந்த வாரம் விசேட விசாரணையை ஆரம்பித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிறந்த திகதி, பெயர் மற்றும் தேசிய அடையாள இலக்கம் அடங்கிய ஆவணத்தின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான ஆவணத்தை நாடாளுமன்றம் ஏற்கனவே குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்தநிலையில் இன்று திங்கட்கிழமை இலங்கை திரும்பியுள்ளார்.

இந்தநிலையில் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆவணத்தில் கையொப்பமிட்ட பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என பேச்சாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4