சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

Mayoorikka
3 years ago
சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இதற்கமைய, தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 15 நாட்களுக்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திர அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் 6 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தன.


இந்தநிலையில், அதற்கான அட்டைகளை ஒஸ்ரியாவில் இருந்து இறக்குமதி செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரிய அட்டைகள் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4