அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 04.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 04.11.2022

மேஷம்
அசுவினி : தொழிலில் லாபம் காண்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பரணி : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். எதிர்பாராத வரவு மகிழ்ச்சியை உண்டாகும்.
கார்த்திகை 1 : எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். இழுபறியாய் இருந்த வேலை முடிவுறும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : துணிச்சலுடன் பொது காரியங்களில் செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
ரோகிணி : பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எடுத்த செயலில் வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2 : நீங்கள் எதிர்பார்த்த தகவல் இன்று உங்களுக்கு வந்து சேரும் நாள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : உங்கள் முயற்சியில் கவனமுடன் செயல்படுங்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
திருவாதிரை : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் செயல்களில் அவசரம் வேண்டாம்.
புனர்பூசம் 1, 2, 3: தொழில் புரியும் இடத்தில் நிதானம் தேவை. பண விஷயத்தில் கவனம் அவசியம்.

கடகம்
புனர்பூசம் 4 : சிலரின் செயலால் உங்களுக்கு மனவுளைச்சல் ஏற்படும். அமைதி காப்பது நல்லது.
பூசம் : வம்பும் பிரச்னைகளும் இன்று உங்களைத் தேடிவரும். பொறுமை மிகவும் அவசியம்.
ஆயில்யம் : உங்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது. மவுனத்தை கடைப்பிடிப்பது நல்லது.

சிம்மம்
மகம் : உங்களுக்கு சிறு சிறு சிரமம் ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் நிம்மதி காண்பீர்கள்.
பூரம் : பிரச்னைகளை சமாளிப்பீர்கள். உறவினர் ஒருவரின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும்.
உத்திரம் 1 : வாழ்க்கைத்துணை வழியே சொத்து வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் காணப்படும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : உங்கள் செயலில் வேகமும் விவேகமும் இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
அஸ்தம் : சோர்வு விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் மறைந்து போகும்.
சித்திரை 1, 2 : உங்களுக்கு பெரியோரின் ஆசி கிடைக்கும். அதிரடியாக செயல்பட்டு முன்னேறுவீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : நினைத்ததற்கும் நடப்பதற்கும் செயலில் வேறுபாடு தோன்றும் நாள் நிதானம் தேவை.
சுவாதி : எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒருவரின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.
விசாகம் 1, 2, 3: உங்கள் முயற்சிகளில் தடையை காண்பீர்கள். நேற்றைய வேலை இன்று முடியும்.

விருச்சிகம்
விசாகம் 4 : பணி புரியும் இடத்தில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
அனுஷம் : உங்கள் செயல்பாட்டினால் மற்றவர்களுக்கு பதில் சொல்லும் நிலை உருவாகும்.
கேட்டை : வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் ஏற்பட தாமதமாகும்

தனுசு
மூலம் : வரவேண்டிய பணம் இன்று உங்கள் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் : நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் திறமை பொது இடத்தில் வெளிப்படும்.
உத்திராடம் 1 : மற்றவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பணப்பழக்கம் அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : பண விஷயத்தில் கவனம் தேவை. தொழில் விருத்திக்கு ஏற்பாடு செய்வீர்கள்.
திருவோணம் : மற்றவரின் நெருக்கடியால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை.
அவிட்டம் 1, 2 : உறவினர் ஒருவரால் சங்கடம் உண்டாகும். யோசித்து செயல்பட வேண்டியநாள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : மனதில் குழப்பம் உண்டாகும். திட்டமிட்டு செயல்படுவதிலும் தாமதம் ஏற்படும்.
சதயம் : குழப்பங்களைத் தவிர்ப்பதால் முயற்சியில் முன்னேற்றம் காணும் நாள்.
பூரட்டாதி 1, 2, 3 : தன்னம்பிக்கை அதிகரிக்கும். இறை வழிபாடு மேற்கொள்வீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : வெளியூர் பயணங்களால் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள்.
உத்திரட்டாதி : எதிர்பாராத பிரச்னைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். விழிப்புணர்வு தேவை.
ரேவதி : குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.