நாட்டில் மக்கள் விரும்பிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன-ஜனாதிபதி

Mayoorikka
2 years ago
நாட்டில் மக்கள் விரும்பிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன-ஜனாதிபதி

நாட்டில் மக்கள் விரும்பிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இதற்கு பின்னரும் ஆர்ப்பாட்டங்கள் எதற்கு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். 

அத்துடன், ஆர்ப்பாட்டங்கள் மூலம் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், மக்கள் விரும்பிய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அதனால் அவர்கள் இப்போது போராட்டத்தை விரும்பவில்லை. 

எதிரணி அரசியல்வாதிகளும் அவர்களின் சகாக்களும்தான் இப்போது வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். எதிரணியினர் தங்கள் சுயலாப அரசியலுக்காகவே போராட்டங்களை நடத்துகின்றனர். 

ஆனால், போராட்டங்களால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அவசியமற்ற இந்தப் போராட்டங்களை நிறுத்திவிட்டு நாட்டை மீளக்கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என்று எதிரணிக்கு நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!