யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு!

Mayoorikka
3 years ago
யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள் யாழ்.போதனா மருத்துவமனையின் பின்புறமாக அமைந்துள்ள 12ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக இரத்த வங்கிக்கு தினமும் காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரையில் நேரில் சமூகமளித்து குருதி கொடை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விபரங்கள் தேவையெனில் அல்லது இரத்த தான முகாம்களை ஒழுங்கமைப்பு செய்ய விரும்புவோரும் 0772105375 மற்றும் 0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4