இந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்து என்னிடம் வீடுகள் கேட்காதீர்கள் : பேராயர்

Prathees
2 years ago
இந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்து என்னிடம் வீடுகள் கேட்காதீர்கள் : பேராயர்

தற்போது நாட்டை பிச்சை எடுக்கும் அளவிற்கு நாட்டின் தலைவர்கள் நாட்டை காட்டிக்கொடுத்துள்ளதாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தேரர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எமது நாட்டின் தலைவர்கள் என அழைக்கப்படுபவர்கள் நாட்டை காட்டிக்கொடுத்து எமது நாட்டை பல வருடங்களாக அந்நியர்களின் அடிமைத்தனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

மக்கள் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்ட பேராயர், பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வீடற்ற குடும்பங்கள் இருக்கும் போது நகர அபிவிருத்தி அதிகார சபையானது டொலர்களுக்கு சொகுசு வீடுகளை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதாக தெரிவித்த அருட்தந்தை, வெளிநாட்டினரின் தேவைகளை பூர்த்தி செய்ய அமைச்சு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படிப்பட்ட ஆட்சியாளர்களுக்கு வாக்களித்து வீடுகளை கட்டித்தருமாறு தாம் கேட்கமாட்டேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!