விவியன் ரிச்சர்ட்ஸ் (LPL) 2022 தொடரில் வர்த்தக நாம தூதுவராக இணைந்துள்ளார்

Kanimoli
2 years ago
விவியன் ரிச்சர்ட்ஸ் (LPL) 2022 தொடரில் வர்த்தக நாம தூதுவராக இணைந்துள்ளார்

கிரிக்கெட் உலகில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சர் விவியன் ரிச்சர்ட்ஸ், லங்கா பிரீமியர் லீக் (LPL) 2022 தொடரில் வர்த்தக நாம தூதுவராக இணைந்துள்ளார்.

எல்பிஎல் போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, எதிர்வரும் டிசம்பர் 6 முதல் 23 ஆம் திகதிவரை லங்கா பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது பதிப்பிற்கு பெரும் ஊக்கத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவியன் ரிச்சர்ட்ஸ் தனது முழு கிரிக்கெட் வாழ்க்கையிலும் ஒரு ராஜாவைப் போல விளையாடியதாகவும், கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் பாராட்டுக்களையும் அன்பையும் எப்போதும் பெற்றுள்ள அவர் இலங்கைக்கு வருவதில் தாம் உற்சாகமாகமடைவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், முன்னாள் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறுகையில், " எல்பிஎல் மூன்றாம் பதிப்பின் வர்த்தக நாமத் தூதராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Viv Richards would have been absolute crowd pleaser in T20 cricket: Ian  Smith - The Statesman
மேலும் இந்தத் தொடர், இலங்கையில் சில சிறந்த திறமைகளை வெளிக்கொண்டுவருகிறது என்பதை கூற விரும்புகிறேன்.

இந்த ஆண்டு ஆசிய கிண்ணத்தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் பலத்தை நாங்கள் பார்த்தோம், அந்த வெற்றியில் லங்கா பிரீமியர் லீக்ககிற்கும் நிச்சயமாக பங்குண்டு.

இந்த போட்டியின் கடந்த இரண்டு தொடர்களையும் நான் பார்த்தேன். மேலும் கிரிக்கெட்டின் தரம் உன்னதமாக இருந்தது, வரவிருக்கும் பதிப்பிலும் வீரர்கள் அதைத் தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன் ”என்றார்.

அவர் குறிப்பிடுகையில், 'நான் இலங்கை மக்களிடமிருந்து மிகுந்த அன்பைப் பெறுகிறேன், இந்த நாட்டை நேசிக்கிறேன்.

வரவிருக்கும் எல்பிஎல் தொடருக்காக இலங்கைக்கு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், குறிப்பாக இந்த நாடும் அதன் மக்களும் சமீபகாலமாக இக்கட்டான காலங்களைச் சமாளித்ததன் பின்னர், போட்டியின் வரவிருக்கும் பதிப்பு இந்த நாட்டு மக்களின் முகத்தில் மீண்டும் புன்னகையை ஏற்படுத்தும். நிச்சயம் மிகப்பெரிய வெற்றியளிக்கும்’ என்றார்.

இது குறித்து LPL 2022 தொடரின் பணிப்பாளர் சமந்த தொடன்வெல கூறுகையில், எல்பிஎல்லில் எங்களுடன் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் நாங்கள் விரும்பும் விளையாட்டின் சிறந்த தூதுவர். ஸ்ரீலங்கா கிரிக்கெட், போட்டியின் வழிகாட்டியாக அவரைக் கொண்டிருப்பதில் பெருமை கொள்கிறது.

அவரை வர்த்தக நாம தூதராக வைத்திருப்பது லீக்கிற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும். ஏனெனில் உலக கிரிக்கெட்டில் ஒரு லீக்கை பிரபலமாக்க அவரது பிரசன்னம் போதுமானது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அதன் தொடக்கப் பதிப்பிலிருந்து வளர்ச்சிப் பாதையில் செல்லும் போட்டிக்கு விவியன் ரிச்சர்ட்ஸின் அனுபவமும் நிபுணத்துவமும் மதிப்புமிக்கதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

எல்பிஎல் 2022 இல் பல நட்சத்திர சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பார்கள். எவின் லூயிஸ், கார்லோஸ் ப்ராத்வைட், ஜான்மேன் மாலன், டுவைன் பிரிட்டோரியஸ், டி'ஆர்சி ஷோர்ட் மற்றும் ஷோயப் மாலிக் உள்ளிட்ட பல வீரர்கள் உள்ளனர்.

தொடரின் முதல் போட்டி ஜஃப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!