ஹைப்பர்லூப் பரிசோதனைக்காக எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஸ்டீல் சுரங்கப்பாதை தகர்ப்பு

Prasu
3 years ago
ஹைப்பர்லூப் பரிசோதனைக்காக எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஸ்டீல் சுரங்கப்பாதை தகர்ப்பு

ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் பரிசோதனைக்காக ஏறத்தாழ ஒரு மைல் நீளமும், 12 அடி அகலமும் கொண்ட ஸ்டீல் சுரங்கப்பாதை ஒன்று எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை கலிபோர்னியாவின் ஹாவ்தோர்னில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸ் தலைமையகத்திற்கு அருகில், ஜாக் நார்த்ரோப் அவென்யூவில் அமைந்துள்ளது.

அதிகரிக்கும் நெரிசல், மாசு, செலவு போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து என்பது எரிச்சலூட்டுவதாகவும், நேரத்தைக் கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில், பஸ், கார், ரெயில், விமானம் போன்றவற்றைத் தொடர்ந்து, மின்காந்த உந்துவிசையை அடிப்படையாகக் கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

எலான் மஸ்க் 2013 முதல் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வந்தார். சுரங்கப்பாதைகள் மூலம் இந்த பயணம் சாத்தியமாகும். எலான் மஸ்க்கின் தி போரிங் நிறுவனம் இதற்கான சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த சுரங்கப்பாதையில் சில சோதனைகளும் நடத்தப்பட்டன.ஆனால், இத்திட்டம் ஒருபோதும் முழுமையாக நிறைவேறவில்லை.

இந்த நிலையில், இந்த சுரங்கப்பாதை முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இனி இந்த பகுதி வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் பரிசோதனைக்காக சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பிற நகரங்களில் எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. போரிங் நிறுவனம், லாஸ் வேகாஸ் நகரத்தில் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பை உருவாக்க வேலை செய்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4